கோவையில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்தது

1 November 2020, 9:21 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

கோவை: கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 573 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்தது.

கோவையில் கொரோனா நோய்த் தொற்று பரவலை காட்டிலும் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்றும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 573 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்துள்ளது. தவிர இன்று சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 248 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 43 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 41 ஆயிரத்து 219 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்று விட்ட நிலையில், தற்போது மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 1,728 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருவதால் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. தவிர பல மாதங்களுக்கு பின் கோவையில் இன்று கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழப்பு ஏற்படவில்லை.

Views: - 20

0

0