கொரோனா: கோவையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்தது

20 October 2020, 9:53 pm
TN Corona 5 Districts- updatenews360
Quick Share

கோவை: கோவையில் இன்று ஒரே நாளில் 328 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாகவே கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை விட நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் இருந்து 328 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் இன்று சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தில் புதிதாக 263 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 374 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 526 பேர் உயிரிழந்த நிலையில், 36 ஆயிரத்து 17 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 831 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 63, 68 வயது முதியவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 526 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 17

0

0