கோவையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது

24 October 2020, 9:58 pm
corona positive -updatenews360
Quick Share

கோவை: கோவையில் இன்று கொரோனாவில் இருந்து 290 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையொட்டி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 290 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது. தவிர இன்று சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலில் கோவை மாவட்டம் ஊரகம், நகரப் பகுதிகளை சேர்ந்த 287 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 264 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 757 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70, 72, 82 வயது முதியவர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 82 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கோவையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 15

0

0