கோவையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்தது

3 November 2020, 8:41 pm
Corona checkup - updatenews360
Quick Share

கோவை: கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 490 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 490 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. தவிர இன்று சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியிலில் கோவையில் ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 238 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 361 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1,064 பேர் சிகிச்சையில் உள்ளனர். இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 63 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 564 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 21

0

0