திருச்சியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவர் தவச்செல்வனுடன் கடந்த 27ம் தேதி மாலை 5மணிக்கு திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு நியாய விலை கடையில் அரிசி வாங்க சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு பணியில் இருந்த ஊழியர் நசுருதீனிடம் ரேஷன் கார்டை கொடுத்து அரிசி கேட்டுள்ளார். அதற்கு நசுருதீன் சசிகலாவை தரக்குறைவாக பேசி ரேஷன் கார்டை வீசி எரிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா அவரை உற்று நோக்கிய போது நசுருதீன் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் கையில் பீர் பாட்டிலுடன் மது அருந்தியப்படியே சசிகலாவை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
பின்னர் மது பாட்டிலை அவர் கீழே வைத்த போது சசிகலா தனது கணவரை அழைத்து அதனை செல்போனில் படம் பிடிக்கும்படி கூறியுள்ளார்.
அப்பொழுதும் எதற்கும் அசராமல் நசுருதீன் அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே அமர்ந்திருந்தார். கீழே வைத்த பீர் பாட்டிலை கூட அவர் மூடி மறைக்கவில்லை. பின்னர் இதனை வீடியோ பதிவாக செய்து கொண்ட சசிகலா சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பதிவேற்றனர்.
மேலும் ரேஷன் கடையில் அவர்கள் அரிசி கேட்ட பொழுது 100 மூட்டை அரிசியை எலி தின்று விட்டது என அவர் கூறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த சசிகலா அரசு ஊழியர் பணி நேரத்தில் மது போதையில் இருந்து உள்ளார் எனவும் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசுகிறார் எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க: கேரளாவில் நள்ளிரவில் நடந்த கார் விபத்து… 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!
இந்த நிலையில் இன்று புத்தூர் அருகே உள்ள சிந்தாமணி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் விற்பனை உதவியாளராக பணியாற்றும் நசுருதீன் என்பவர் பணி நேரத்தில் மது போதையில் இருந்ததாகவும் வாடிக்கையாளரிடம் அநாகரிகமாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் துணைப்பதிவாளர் ராஜகுமார் விசாரணை நடத்தினர்.
இதனை அடுத்து நசுருதீனை தற்காலிக பணிநீக்கம் செய்து கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் துணைப்பதிவாளர் ராஜகுமார் உத்தரவிட்டுள்ளார். மது போதையில் இருந்த நசுரிதினை அவரது மனைவி கை தாங்கலாக அழைத்துச் சென்றார்.
நசுருதீன் சிந்தாமணி வளாகத்திலேயே போதையில் சுற்றியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. தினமும் மதுபோதையில் ரேஷன் கடை ஊழியர் இருந்த சம்பவம் பொதுமக்களிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
This website uses cookies.