வீடு கட்ட கூலித்தொழிலாளியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய அதிகாரி : மாநகராட்சி ஆணையர் எடுத்த அதிரடி முடிவு!!

18 September 2020, 12:46 pm
Kanya Corporation- updatenews360
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் கூலித்தொழிலாளி வீடு கட்ட ரூ 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட மாநகராட்சி அதிகாரிகள். ஆணையரிடம் புகார் கொடுத்த கூலித்தொழிலாளி. உடனடி நடவடிக்கை எடுத்ததால் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வாத்தியார்விளை ஜஸ்ட் தெருவை சேர்ந்தவர் கனகலிங்கம். கூலி தொழிலாளியான இவர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட விண்ணப்பித்தார்.

அதன்படி அவருக்கு அனுமதி கிடைத்ததும் தனக்கு சொந்தமான 410 சதுர அடி இடத்தில் வீட்டைக் கட்டி வந்தார். இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியில் பிளான் இன்ஜினியர் ஜாய், வீடு கட்ட ரூ.25 ஆயிரம் தரும்படி கேட்டதாகவும் ஆனால் கனகலிங்கம் தர மறுத்ததால் மற்றொரு மாநகராட்சி அதிகாரியான தேவாசீர்வாதம் என்பவருடன் இணைந்து வீட்டை இடித்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கனகலிங்கம் இன்று நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்தை சந்தித்து புகார் மனு அளித்தார். மனுவில், அரசு விதிமுறைகளின்படி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நான் கட்டும் வீட்டிற்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு கொடுக்க மறுத்ததால் வீட்டை இடிக்க முயற்சிக்கும் அதிகாரிகளான ஜாய் மற்றும் தேவாசீர்வாதம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு வீட்டை கட்ட அனுமதிக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதுடன், வீட்டை தொடர்ந்து கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை என்று கூறி அனுமதி அளித்த கடிதத்தை உடனடியாக கனகராஜ் இடம் கொடுத்தார்.

கூலி தொழிலாளியின் புகார் மனுவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆஷா அஜித்துக்கு கூலி தொழிலாளியான கனகராஜ் மற்றும் அவரது மனைவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Views: - 11

0

0