கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வந்த அதிகாரிகள் விரட்டியடிப்பு

Author: Udhayakumar Raman
1 July 2021, 11:36 pm
Quick Share

நீலகிரி : கூடலூரில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறித்த அறியாமை பழங்குடியின மக்களிடையே மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புத்தூர் வயல் பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 5 வயது முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அறிந்து சுகாதாரத்துறையினர் மற்றும் நகராட்சி ஆணையர் பாஸ்கரன் அந்த பகுதிக்கு சென்று கிருமிநாசினி தெளிப்பதற்கும் குழந்தைகளை மருத்துவத்துவ மனைக்கு அழைத்து செல்ல சென்ற அதிகாரிகளை அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எதுவும் கிடையாது என்றும், ஊருக்குள் வர வேண்டாம் என்றும் அரிவாள்,இரும்பு கம்பி, கட்டைகளை வைத்து அவர்களை மிரட்டி ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடலூர் டிஎஸ்பி சசிகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பேச்சுவார்த்தை உடன்படவில்லை. இப்பகுதியில் ஆதிவாசிகளுக்கு என்று தனி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை துறையில் அழைத்து பேசிய பொழுதும் இவர்கள் தங்கள் குழந்தைகளை திட்டவட்டமாக அனுப்ப முடியாது என கூறியதையடுத்து அதிகாரிகள் திரும்பி வந்துள்ளனர். இதனால் ஆதிவாசி கிராமங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Views: - 131

0

0