ஆட்சியர் வாகனத்தை மறித்து தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி : வாழ வழி கேட்டு கண்ணீர்!!!

2 March 2021, 12:41 pm
Old Woman Dharna -Updatenews360
Quick Share

மதுரை : மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு மூதாட்டி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மேலூர் அடுத்த பூலாம்பட்டியை சேர்ந்த புத்திசிகாமணி மனைவி நாகலட்சுமி. இவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் மாவட்ட ஆட்சியர் வாகனத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவரை காவல்துறையினர்மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகலட்சுமி கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது

“என் கணவர் புத்திசிகாமணி இறந்துவிட்டார். எங்களுக்கு ஒரே மகன். அவரும் சாலை விபத்தில் இறந்துவிட்டார். எனவே நான் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சிலர் எனக்கு சொந்தமான காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.

இதேபோல அண்ணா பஸ் நிலையம் அருகே எனக்கு சொந்தமான கடையில் வாடகைக்கு இருப்பவர் கடையை காலி செய்ய மறுக்கிறார். எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Views: - 18

0

0