செல்போன் கடையில் தானம் தராததால் செல்போன் திருடிய முதியவர்:சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

Author: Udhayakumar Raman
2 August 2021, 11:56 pm
Quick Share

அரியலூர்: செல்போன் கடையில் முதியவர் தானம் கேட்டு தராததால் செல்போன் திருடிய சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் மணிகண்டன். மேலும் தனது கடையில் பேருந்தில் இருந்து வரும் பயணிகள் செல்போனில் சார்ஜ் இல்லாமல் வந்தால் இலவசமாக சார்ஜ் செய்யும் வசதி செய்துள்ளார். இதனால் அந்த கடையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கடையில் செல்போனை கொடுத்து சார்ஜ் செய்துகொண்டு வாங்கி செல்வது வழக்கம். அதுபோல் இன்று ஒரு வாடிக்கையாளர் கொடுத்த செல்போனை சார்ஜ் போட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது கடையில் பணிபுரியும் பெண்ணிடம் முதியவர் ஒருவர் தானம் கேட்டு நின்றபோது பணி பெண் தரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அந்த முதியவர் சார்ஜ் போட்டு இருந்த செல்போனை எடுத்து சென்றுள்ளார். இதனை அறியாத கடையில் வேலை செய்யும் பெண் அந்த செல்போனின் உரிமையாளர் கேட்டபோது தான் செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சியை பார்த்தபோது அந்த முதியவர் செல்போனை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அரியலூர் நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தானம் கேட்டு தராததால் செல்போன் திருடிய சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 239

2

0