“சாமியாடி மாரியம்மா”வுக்கு தடுப்பூசியா..?? செவிலியரை ஓடஓட விரட்டிய மூதாட்டி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udhayakumar Raman
1 December 2021, 7:56 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்த வந்த செவிலியரை சாமியாடிய மாரியம்மாவுக்கு ஆகாது என துரத்திய மூதாட்டி குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி 100 சதவீதத்தை எட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அப்படி ஒரு முதியவர் குடும்பத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டபோது வேண்டாம் என்று கை எடுத்து கும்பிட்டனர். தொடர்ந்து செவிலியர் ஒன்றுமே ஆகாது என்று கூறியவுடன் திடீரென மூதாட்டி சாமி வந்து மாரியம்மா… அங்காளம்மனுக்கு ஆகாது இன்னு சொல்லறேன் என்று கத்த தொடங்கினர். இதையடுத்து அவரது கணவர் மருத்துவ குழுவினரை அங்கிருந்து விரட்டி அடித்தார். இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தவந்த செவிலியரை சாமியாடி துரத்திய மூதாட்டி குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Views: - 352

0

0