எதிர்த்து நின்ற அனைவருக்கும் டெபாசிட் காலி: 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மூதாட்டி..!!

Author: Aarthi Sivakumar
13 October 2021, 9:41 am
Quick Share

நெல்லை: தேர்தலில் எதிர்த்து நின்றவர்களை டெபாசிட் இழக்கச் செய்து 1000 வாக்குகள் வித்தியாசத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளார்.

கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணும் பணி நேற்று தொடங்கியது. 2வது நாளாக வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

நேற்று, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஏராளமான சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார்.

பெருமாத்தாள் பாட்டிக்கு எதிராக போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்து 1000 வாக்கு வித்தியாசத்தில் மூதாட்டி கெத்தாக வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்ட மூதாட்டி பெருமாத்தாள், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Views: - 152

0

0