கத்தியை எடுத்தவன் கத்தியால் குத்தி செத்த கொடுமை : வழிப்பறி செய்த போது சம்பவம்!!
30 November 2020, 3:14 pmதிருப்பூர் : நள்ளிரவு வேலை முடிந்து வந்த வடமாநில தொழிலாளிகளிடம் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிய வாலிபரை விரட்டி சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 33). வீடில்லாத இவர் திருப்பூரில் சாலையோரங்களில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் சாலையோரம் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வடமாநில தொழிலாளர்களான தினேஷ் குமார் மற்றும் சத்திரி ஆகியோர் அவ்வழியே நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டிய சீனிவாசன் வடமாநில இளைஞரான தினேஷ்குமார் இடம் இருந்து 2000 ரூபாய் பணம் செல்போன் ஆகியவற்றை மிரட்டி பறித்துள்ளார்.
அவற்றைப் பறித்துக் கொண்டு ஓடிய போது, வடமாநில இளைஞர்கள் இருவரும் சீனிவாசனை துரத்திச் சென்று வழிமறித்து தங்கள் பொருளை கேட்டுள்ளனர். ஆனால் தர மறுத்த சீனிவாசன் வடமாநில இளைஞர்களை மீண்டும் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
இதையடுத்து வடமாநில இளைஞர்கள் சீனிவாசனிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரைக் குத்திக் கொன்றனர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்
0
0