கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட லாரி உரிமையாளர்..! போலீசார் விசாரணை…

Author: kavin kumar
9 January 2022, 5:37 pm
Quick Share

திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே லாரி உரிமையாளர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கன்னியாகுடியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சதீஷ்குமார் (32). சொந்தமாக லாரி ஒன்றை வைத்துள்ளார். தற்சமயம் மண்ணச்சநல்லூர் காந்திநகரில் உள்ள 7வது குறுக்கு சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும், 2 1/2 வயதில் பிரபஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வடக்கு ஈச்சம்பட்டி உள்ள வறட்டு ஏரியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சதீஷ்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டு தண்ணீரில் தூக்கி வீசி உள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். பின்னர் சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஏரியில் கிடந்த சதீஷின் உடலை மீட்டனர். பின்னர் உடலை கைப்பற்றிய மண்ணச்சநல்லூர் போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் ஜீயபுரம் டிஎஸ்பி கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 462

0

0