குட்டிக்கரணம் போட்டாலும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் : தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கருத்து!!

5 November 2020, 3:17 pm
EVKS - Updatenews360
Quick Share

ஈரோடு : பாரதிய ஜனதா கட்சி என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழக மக்கள் பாரதிய ஜனதா கட்சியை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு அடுத்துள்ள கருங்கல்பாளையத்தில் அமைத்து காந்தியின் சிலை 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், குஷ்பு கட்சி மாறி காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டப்பட்டு வருவதை குறித்த கேள்விக்கு, குஷ்பு பிஜேபிக்கு சென்றதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை எனவும் அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று தெரிவித்தார்.

பாஜக என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழக மக்கள் பாரதிய ஜனதா கட்சியை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை 7 பேரும் குற்றவாளிகள் இல்லை என்ற பொதுவான கருத்து பரவி வரும் நிலையில் அந்த கருத்து உண்மை என்றால் அவர்களை விடுதலை செய்வதில் ஆட்சேபம் ஏதும் இல்லை எனினும் சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்வோம் என்று கூறினார்.

திருமாவளவன் கூறிய கருத்தில் எந்த விதமான தவறும் இல்லை என்றும் அந்த கருத்து 100% உண்மை மேலும் திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்காக அல்ல கொள்கையுடன் ஒத்தகருத்து உடனே இருக்கின்றோம். தேர்தல் நேரத்தில் காங்கிரஸிற்கு குறைவான இடங்களே தருவார்கள் என்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முயற்சி தான் என்று தெரிவித்தார்.

Views: - 16

0

0