சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம்.. நடுவானில் திடீர் கோளாறு : விமானியின் சாமர்த்தியம்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2021, 2:19 pm
Air India Flight- Updatenews360
Quick Share

சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் 117 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என 123 பேருடன் புறப்பட்டது.

விமானம் நடுவானில் சென்ற போது திடீர் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதனால் பதற்றமடைந்த அவர் விமானத்தை தொடர்ந்து இயக்கினால் பெரும் விபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த அவர் உடனே விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

மேலும் விமானத்தில் கோளாறு ஏற்பட்டத்தை கண்டுபிடித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து துரிதமாக விமானி செயல்பட்டதால் 123 பயணிகள் உயிர் தப்பினர்.

இதையடுத்து விமானத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், விமானிகள் அனைவரும் ஓய்வு கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மேலும் விமானத்தில் ஏற்பட்ட கோளாரை பழுது பார்க்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்ப்பாக விமானியின் சாமர்த்தியத்தால் 123 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Views: - 195

0

0