நடிகர் தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமல்லாமல் ஹாலிவுட் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் முதன்முதலாக தானே இயக்கி கதாநாயகனாக நடிக்க போகிறார் என்ற செய்தி சமீபத்தில் வைரலானது. இதனிடையே அப்படத்தின் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று யோசித்து உள்ளாராம்.
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே தன் அம்மாவைப் போல தமிழ் சினிமாவிலும் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ஜான்வி கபூர் தமிழில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளாராம்.
அதேபோல தயாரிப்பாளர் போனி கபூரும், ஜான்வி கபூரை தமிழில் அறிமுகம் செய்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனை தெரிந்து கொண்ட தனுஷ் தற்போது தான் இயக்கவிருக்கும் திரைப்படத்தின் கதாநாயகியாக ஜான்பி கபூரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். ஆனால் இதற்கு போனிகபூர் சம்மதிக்கவே இல்லையாம். ஏனென்றால் நடிகர் தனுஷ் சமீபத்தில் அவரது முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்திருந்தார்.
இதனையடுத்து ரஜினிகாந்திற்கும், தனுஷிற்கும் பல கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், தனுஷிற்கு திரைப்பட வாய்ப்புகள் சரிவர கிடைப்பது இல்லையாம். இதனை அறிந்து கொண்ட போனிகபூர் தன் மகளை தனுஷுடன் சேர்ந்து நடிக்க வைத்தால் ஜான்வி கபூரின் கெரியர் பாதிக்கப்படும் என்பதை அறிந்து தனுஷுடன் நடிக்க வைக்க முட்டுக்கட்டையாக உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் தனுஷ் நடித்த ஒரு சில திரைப்படங்களில் ஜான்வி கபூர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும் போனிகபூர் தனுஷுடன் தன் மகளை நடிக்க வைப்பதில் விருப்பம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே தனுஷ் தற்போது போனி கபூரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.