தோவாளை சந்தையில் பூக்கள் விலை 5 மடங்கு உயர்வு : மக்கள் குவிந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி!!

24 October 2020, 11:39 am
flower rate Hike - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை 5 மடங்காக உயர்ந்துள்ள நிலையல் பூக்களை வாங்கி செல்ல பொது மக்கள் குவிந்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தை தென்மாவட்டங்களில் உள்ள பூ சந்தைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சந்தையில் கடந்த சில தினங்களாக பூக்களின் விலை மிகவும் குறைந்து காணப்பட்ட நிலையில் நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில் இன்று மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை களை கட்டியது.

இதன்படி இன்று மல்லி ரூ 1000க்கும், பிச்சி ரூ 800க்கும், முல்லை ரூ.800 க்கும் கனகாம்பரம் ரூ .1000 க்கும், சம்மங்கி ரூ.600க்கும், வாடாமல்லி ரூ.200 க்கும்,பாக்கேட் ரோல ரூ.50-ம், பட்டன் ரோஸ் ரூ.320 க்கும், கொழுந்து ரூ.150 க்கும் மரிக்கொழுந்து ரூ.200 க்கும், மஞ்சள் கிரேந்தி 100 க்கும், ஆரஞ்சி கிரேந்தி 120 க்கும், வெள்ளை செவ்வந்தி ரூ.350க்கும், மஞ்சள் செவ்வந்தி ரூ 180க்கும், மற்றும் பல பூக்கள் விலை ஐந்து மடங்கு ஏற்றத்துடன் காணப்படுகிறது.

நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளுக்காக பூக்களை வாங்கி செல்ல பொது மக்கள் குவிந்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனாவை முன்னிட்டு கேரளாவில் இருந்து யாரும் வராததால் இங்கிருந்து பூக்களை அனுப்பும் பணிகளில் வியாபாரிகள் ஈடுபட்டு உளனர். இன்று ஒரே நாளில் தோவாளை பூ சந்தைக்கு 60 டன் பூக்கள் வந்து உள்ளன.

Views: - 70

0

0