மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்று இலவசமாக பயணிக்கலாம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!!

14 February 2021, 9:44 am
Chennai metro train - updatenews360
Quick Share

சென்னை: மெட்ரோ ரயிலில் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணிவரை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி துவங்கி வைக்கிறார். இதற்காக, சென்னை போக்குவரத்தில் 5 மணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதையொட்டி, இன்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய பெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது.

இதன்மூலம், விமான நிலையம்- திருவொற்றியூர் விம்கோநகர், பரங்கிமலை- சென்ட்ரல் இடையே மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

Views: - 3

0

0