ஒரு நாள் கூட விடாம இந்து அறநிலையத்துறை வழக்குகள் வருவதற்கு காரணம் தொடர் ஆய்வுதான் : அமைச்சர் சேகர்பாபு!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 6:41 pm
Sekar Babu - Updatenews360
Quick Share

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் பல்வேறு திருக்கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று மரக்காணம் பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் கோவில்களின் அடிப்படை வசதிகள் மற்றும் புனரமைப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சிறுபான்மையினர் துறை நல அமைச்சர் மஸ்தான் மாவட்ட ஆட்சியர் மோகன் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

SekarBabu Minister DMK Minister

பின்னர் செய்தியாளர் இடம் பேசி அமைச்சர் சேகர்பாபு, தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திருக்கோயில்கள் புனரமைக்கும் பணிகளை வேகப்படுத்தியும் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு கால விதிப்படி நடக்க வேண்டிய குடமுழுக்கு பணிகளை விரைவுபடுத்தியும், ஏற்கனவே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆண்டு கணக்கிலே அந்தப் பணிகள் நிறைவு பெறாமல் பல ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை விரிவுபடுத்தி ஒரு முடிவுக்கு கொண்டு வந்து குடமுழக்கு தேதிகளை அறிவிப்பது போன்ற திட்டங்கள் வைத்து இந்த ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகின்றன.

தொடர் ஆய்வினை மேற்கொண்டு வருவதால் தான் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு 1500 கோயில்களில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் மேலான கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு செய்ய தமிழக அரசு இதுவரை இல்லாத அளவுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கி அதன் மூலம் 80 கோயில்களில் இந்த ஆண்டு குடமுழுக்கு செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர் மேம்பாட்டு பணிகளுக்கு மத்தியில் கோயில்களுக்கு வரவேண்டிய வருவாயை முறைப்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து துறையின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தான் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை 200 கோடி ரூபாய் அளவுக்கான வாடகை வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோயில் நிலங்கள் வணிக ரீதியாக பண்பாட்டு உள்ள இடங்களை கண்டறியப்பட்டு வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

கோயில் ஆக்கிரமிப்புகளை மீட்க முயலும் போது அவர்கள் நீதிமன்றம் சென்று விடுவதால் தாமதம் ஏற்படுகிறது. கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில் இதை முறைப்படுத்தவில்லை. இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த வழக்குகள் வராத நாளே இல்லை என்ற அளவிற்கு தொடர்ந்து வழக்குகள் நடத்தப்படுகிறது.

SekarBabu Minister DMK Minister

தமிழ்நாட்டில் 72 ஆயிரம் கோயில்கள் உள்ளது அந்த கோயில்களில் தனித்தனியாக பொது மக்கள் குழுக்கள் அமைத்து பராமரிப்பு செய்து வருகின்றனர் பொதுமக்களின் திருப்பணிகளை அரசு அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர் அரசியல் ரீதியாக இந்த போன்ற குழுக்கள் செயல்படும் போதுதான் இந்து சமய அறநிலையத்தை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

திருப்பணிக்கு ஒப்புதல் அளிக்கும் குழுவில் ஸ்தபதிகள், தொல்லியல் துறை வல்லுனர்கள், ஆசாரிகள் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர் மண்டல வாரியாக இந்த குழுக்கள் அமைக்கப்பட்டது என தெரிவித்தார்.

Views: - 395

0

0