பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு: கூட்டுறவு சங்க பதிவாளர் இன்று ஆலோசனை…!!

6 February 2021, 12:02 pm
society meet - updatenews360
Quick Share

சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர் காணொலிக் காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று முதலமைச்சர் பழனிசாமி 110வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தற்போது கொரோனா, புரெவி மற்றும் நிவர் புயல்கள், ஜனவரி மாத மழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ரூ.12,110 கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் அரசாணையையும் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வருகின்ற நிதிநிலை அறிக்கையிலேயே ஏற்படுத்தாகவும், இந்த அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் விவரங்களை சேகரிக்கும் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர் காணொலிக் காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் அனைத்து கூட்டுறவு வங்கி மேலாளர்கள், பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Views: - 0

0

0