APACHE பைக்கை அபேஸ் செய்த கொள்ளையன் : காட்டிக் கொடுத்த மூன்றாவது கண்!!

29 January 2021, 12:38 pm
Bike Theft CCTV- Updatenews360
Quick Share

திருப்பூர் : வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் அஜய். இவர் வழக்கம்போல தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியே வந்த மர்ம நபர் ஒருவர் சிறிது நேரம் அங்கும் இங்கும் நோட்டமிட்டபடி திடீரென தனது கையில் வைத்திருந்த சாவியைக் கொண்டு இரு சக்கர வாகனத்தின் லாக்கை திறந்துள்ளார்.

இதையடுத்து மீண்டும் சாலையில் ஆள் நடமாட்டத்தை பார்த்து பின்பு மெதுவாக இரு சக்கர வாகனத்தை சிறிது தூரத்திற்கு தள்ளி சென்றுள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பின்னர் வாகனத்தை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்று ஸ்டார்ட் செய்து திருடிச் சென்றார். இதையடுத்து தனது பைக்கை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அஜய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 29

0

0