திருமண நிகழ்ச்சியில் நூதன திருட்டு :மொய் பணம் கொள்ளை!!

1 November 2020, 4:44 pm
Theft - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒருலட்சரூபாய் மொய் பணத்தை திருடிச்சென்ற நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நவீன், ஆந்திர மாநிலம் தடாவை சேர்ந்த பிந்து ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கவரப்பேட்டை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அன்பளிப்பு பணத்தை மணமக்களிடம் வழங்கிய நிலையில் மணமக்கள் அதனை வாங்கி தங்களது உறவினர்களிடம் கொடுத்து வந்தனர்.

இரவு மணமேடை அருகே வந்த மர்ம நபர் தான் இரவு உணவு சாப்பிட்டதாகவும் நீங்கள் சாப்பிடுமாறு கூறி உறவினரை அனுப்பி வைத்து விட்டு அன்பளிப்பு பணத்தை வாங்கி வைத்துள்ளார்.

சற்று நேரத்தில் மொய் கவர்கள் அடங்கிய சுமார் ஒரு லட்ச ரூபாயை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். இதுகுறித்து உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கவரப்பேட்டை போலீசார் தேர்வாய் கிராமத்தை சேர்ந்த சார்ந்த ஈசன் என்கிற வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 20

0

0