நகை அடகு கடையில் நகைகள் இருந்த பெட்டியை அலேக்காக தூக்கி சென்ற கொள்ளையர்கள் : காத்திருந்த டிவிஸ்ட்…சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 3:30 pm
Theft -Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே பங்களாமேடு பகுதியில் உள்ள ஒரு அடகு கடையின் ஷட்டரை உடைத்து அடகு கடை பெட்டியை தூக்கிச்செல்லும் திருடர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பங்களாமேடு பகுதியினை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அதே பகுதியில் கணபதி என்ற நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

குடியிருப்புகள் அதிகம் நிறைந்த இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த இந்த நகை அடகு கடையில் நேற்று இரவு பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியானது நடைபெற்றுள்ளது.

நள்ளிரவு 2:00 மணிக்கு அடகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் இருவர் அடகு கடையில் வைத்திருந்த நகை பெட்டியை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில் அந்த பகுதியை சேர்ந்த இருவர் சாலையில் இருசக்கர வாகனத்தில் கண்டகொள்ளையர்கள் பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு நின்று கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது சந்தேகமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள்
அவர்களை நீங்கள் யார் என அந்த நபர் கேட்கவே அது குறித்து பதில் அளிக்காமல் நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென கொள்ளையர்கள் பெட்டியை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் முழுவதும் அந்த நகை அடகு கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருவதுடன் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தப்பியோடிய 2 கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் திருடர்கள் தூக்கி வந்த அந்த பெட்டியில் நகைகள் எதுவும் இல்லை மாறாக அடகு கடையில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் ரசீதுகள் மட்டுமே அதில் வைத்திருந்துள்ளனர். இதனால் நகைகள் தப்பியது. தற்போது இந்த கொள்ளை சம்பவ சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

Views: - 852

0

0