கடைக்கு சென்ற சிறுமியிடம் நகை பறித்த கொள்ளையர்கள் : வாகன சோதனையில் போது சிக்கினர்!

10 October 2020, 8:18 pm
Kanya Arrest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : எஸ்.டி மங்காடு பகுதியில் கடைக்கு‌ சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமியிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.டி மங்காடு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது 10 வயது மகன் மற்றும் 12 வயது ‌மகள் ஆகியோர் மங்காடு சாலையில் நடந்து கடைக்கு பொருட்கள் வாங்க சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பனிரெண்டு வயது சிறுமி அணிந்திருந்த இரண்டு சவரன் செயினை பறித்து விட்டு அதே இருசக்கர ‌வாகனத்தில் ஏறி தப்பி சென்றனர்.

இது சம்பந்தமாக சிறுமியின் தந்தை நித்திரவிளை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சி.சி‌டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நித்திரவிளை போலீசார் விரிவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் சந்தேகப்படும் நிலையில் வந்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மங்காடு பகுதியில் சிறுமியிடம் நகை திருடியவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து நித்திரவிளை போலீசார் குமரி மாவட்டம் திங்கள் சந்தை மற்றும் நெய்யூர் பகுதியை சேர்ந்த ஜெபின் (வயது 21),அபீஷ் (வயது 21) என்ற இரு இளைஞர்களையும் கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Views: - 29

0

0