திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டாரிடம் தகராறு செய்த பெண் : தடுக்க வந்த காவலரின் சீருடையை கிழித்து கையை கடித்த ரவுடி லேடி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2022, 9:38 pm
Lady Rowdy - Updatenews360
Quick Share

சென்னை : திருமணம் நின்ற விரக்தியில் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்ட பெண் தலைமை காவலரின் சட்டையை கிழித்து கையை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை திருவொற்றியூர் எஸ்.பி கோவில் பகுதியில் வசித்து வருபவர் ரேவேந்திரன். தனியார் வங்கி ஊழியரான இவரும் புதுவண்ணாரப்பேட்டை பூண்டிதங்கமாள் தெரு பகுதியில் வசித்து வரும் செல்வி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17 அன்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மணமகன் வீட்டாரிடம் திருமணத்திற்கு முன்பே மணமகள் செல்வி 5 சவரன் நகை, இரு சக்கரவாகனம் ஒருலட்ச ருபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்பட்ட நிலையில் திருமண முடிவு ரத்து செய்யப்பட்டது.

இதனால் விரக்தியடைந்த செல்வி அவ்வபோது ரேவேந்திரன் வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் காதலன் வீட்டிற்கு சென்று காதலன் இல்லாத சமயத்தில் ரேவேந்திரனின் பெற்றோரிடம் சண்டையிட்டு தகாத ஆபாச வார்த்தைகளில் பேசி தாக்க முற்பட்டுள்ளார்

இதனால் ரேவேந்திரனின் தாயார் ரேனுகா காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர் காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் சென்ற நிலையில் தடுக்க முற்பட்டுள்ளார்.

இதில் செல்வி அடங்க மறுக்கவே அதை செல்போனில் படம் பிடித்த தலைமை காவலரை வலது கையை பிடித்து கடித்துள்ளார். மேலும் தலைமை காவலர் சரவணனின் சட்டையை பிடித்து கிழித்துள்ளார்

இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே திருவொற்றாயூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ருக்மணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல் நிலையம் அழைத்து சென்றார்.

பின்னர் , கொலை மிரட்டல் விடுத்தல் , அத்துமீறி உள்ளே நுழைதல் , தகாத வார்த்தைகளில் பேசுதல் , அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் , போன்ற ஆறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

திருமணம் நின்ற விரக்தியில் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று சண்டையிட்டதும், தடுக்க சென்ற காவலரின் கையை பிடித்து கடித்து விட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 405

0

0