மணல் குவியலில் விளையாடிய சிறுவர்கள் : காணாமல் போன மூதாட்டியின் எலும்புக்கூடு வெளியே வந்ததால் பரபரப்பு!!

24 October 2020, 6:51 pm
Nagai Murder - Updatenews360
Quick Share

நாகை : சீர்காழி அருகே திருகருக்காவூரில் மழைநீர் கால்வாய்கள் பள்ளம் தோண்டிய மணலில் காணாமல் போன மூதாட்டியின் எலும்புக்கூடு கண்டெடுத்தது குறித்து மகனிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருக்கருகாவூர் சேர்ந்தவர் சாவித்திரி (வயது 75 ). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட இவரது மகன் வெளியூரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவர் காணாமல் போயுள்ளார்.

இதுகுறித்து சீர்காழி காவல் நிலையத்தில் இவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருக்கருகாவூரில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டி ஒரு இடத்தில் மணல் குவியலை குவித்து வைத்துள்ளனர்.

இன்றைய பகுதியில் மணல் மேல் ஏறி விளையாடிய சிறுவர்கள், மணல் குவிக்கப்பட்ட இடத்தில் புடவையுடன் கூடிய எலும்புக்கூடு இருப்பதை கண்டறிந்தனர்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காணாமல் போன மூதாட்டி என்பது அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தினர்.

இதுகுறித்து அவரது மகன் வேலு (வயது 46) என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Views: - 0

0

0