படையை நடுங்க வைத்த பைக்கில் புகுந்த பாம்பு : பார்ட் பார்ட்டாக கழட்டப்பட்ட வாகனம்!!

4 February 2021, 10:45 am
Biek Snake- Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் நின்று பைக்கில் பாம்பு புகுந்ததாக பல மணிநேரம் போராடிய தீயணைப்பு துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ஜமீன்செங்கப்படை கிராமத்தினை சேர்ந்தவர் வடிவேல்ராஜ், மீன்வியாபாரம் செய்து வருகிறார். இவரது சகோதாரர் பாலமுருகன் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலமுருகன் ஜமீன்செங்கப்படை கிராமத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை பாலமுருகன் கோவில்பட்டியில் இருந்து ரெயில் மூலமாக சென்னைக்கு கிளம்பியுள்ளார். அவரை வடிவேல்ராஜ் தனது பைக்(ஸ்கூட்டி) மூலமாக வழி அனுப்ப கோவில்பட்டி ரெயில்வே நிலையத்திற்கு வந்துள்ளார்.

ரயில் வருவதற்கு சிறிது நேரம் இருந்த காரணத்தினால் சகோதார்கள் இருவரும் ரெயில்வே நிலையத்திற்கு வெளியே உள்ள பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பாம்பு வடிவேல்ராஜ் பைக்கிற்குள் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேல்ராஜ் ரெயில்வே நிலைய போலீசாரிடம் கூறியுள்ளார். போலீசார் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பைக்கில் இருப்பதாக கூறப்பட்ட பாம்பினை வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

நேரம் தான் சென்றது தவிர பாம்பு வெளியே வந்ததாக தெரியவில்லை, சுமார் 3மணி நேரம் போராடி பார்த்தும் பாம்பு வெளியே வரவில்லை என்பதால் வேறு வழியில்லமால் அருகில் உள்ள இரு சக்கர வாகன ஓர்க்ஷாப்பிற்கு பைக்கினை கொண்டு சென்று, பைக்கினை முழுவதுமாக பிரித்து பார்த்தனர்.

ஆனால் பாம்பு இருந்ததற்கான அடையாளம் எதுவும் தெரியவில்லை. இதனால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பெரும் ஏமாற்றத்துடன் தீயணைப்புதுறையினரும், வடிவேல்ராஜூ திரும்பி சென்றனர். பைக்கில் பாம்பு சென்ற பிரச்சினையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பைக்கில் இருந்து பாம்பு வந்து விடாத என்று ஏரளமான மக்களும் நீண்ட நேரம் காத்து இருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Views: - 0

0

0