எல்லாத்துக்கு காரணம் நீ தா : கணவன் மனைவி சண்டையை தடுக்க வந்த மாமியாரை கொலை செய்த மருமகன்!!

Author: Udhayakumar Raman
23 June 2021, 2:31 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூரில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையை சமாதானம் செய்ய வந்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரில் வசித்து வருபவர் சங்கரநாரயணன் இவர் மகள் முனீஸ்வரி. இவர் வெம்பக்கோட்டை அருகே கட்டணச்செவல் கிராமத்தை சேர்ந்த ராம்குமாரை என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். ராம்குமார் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்ததுள்ளது. இதனால் முனீஸ்வரி ராம்குமாருக்கு கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்து உள்ளனர். இந்த நிலையில் முனீஸ்வரி நாட்களுக்கு முன்பு ராம்குமாருக்கு விவகாரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கோபமடைந்த ராம்குமார் நேற்று இரவு சாத்தூர் அண்ணாநகரில் உள்ள அப்பா வீட்டில் இருந்த மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையை அருகில் இருந்த முனீஸ்வரியின் சித்தி மாரியம்மாள் விலக்கியுள்ளார்.

அப்போது தான் வைத்திருந்த கத்தியால் ராம்குமார் மாரியம்மாளை குத்தியுள்ளார். இதில் மாரியம்மாள் இரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் நகர் காவல் துறையினர் உயிரிழந்த மாரியம்மாளின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த முனீஸ்வரி (25) அவருடைய அம்மா சந்திரா (58) சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளி ராம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 288

0

0