ஆசை ஆசையாய் வாங்கிய “இன்னோவா கார்“ : மகனே காரைத் திருடிய கொடுமை!!
18 August 2020, 11:20 amமதுரை : தந்தைக்கு தெரியாமல் காரை திருடிச் சென்று விற்க முயன்ற மகன் தலைமறைவானதால் தேடும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
மதுரை EB காலணி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல். இவர் சொந்தமாக இன்னோவா கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த நிலையில் இவருக்கு ராஜா முகமது என்ற ஒரு மகன் உள்ளார்.
அவர் தந்தைக்கு தெரியாமல் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இனோவா காரை திருடிச் சென்று அதனை விற்க முயன்றுள்ளார். வீட்டில் நிறுத்தப்பட்ட கார் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த அப்துல், வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது மகனே காரை திருடிச் சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தந்தை தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகனை தேடி வருகின்றனர்.