பழவேற்காடு அருகே வந்த துர்நாற்றம் : ஆளே இல்லாத கரையில் கிடந்த ஆளுயர மீன்!!
16 January 2021, 9:14 pmதிருவள்ளூர் : பழவேற்காட்டில் ஒரு டன் எடையுடைய டால்பின் செத்து கரை ஒதுங்கிய நிலையில் அப்புறப்படுத்தப்படாதால் இறந்த மீனில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியானது சுற்றுலாதலம் மற்றும் மீன்பிடி பகுதியாக உள்ளது. இந்த நிலையில் பழவேற்காடு முகத்துவாரம் வழியாக டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் பழவேற்காடு ஏரியில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது.
இன்று காணும் பொங்கல் மீனவர்கள் யாரும் பழவேற்காட்டில் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் கரை ஒதுங்கியதை எவரும் கவனிக்கவில்லை.
இந்த நிலையில் கரை ஒதுங்கிய மீனில் இருந்து துர்நாற்றம் வரவே அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது சுமார் ஒரு டன் எடை கொண்ட டால்பின் கரை ஒதுங்கியது தெரியவந்தது. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டும் அதனை உரிய முறையில் அகற்றாததால் இறந்த மீனில் இருந்து துர்நாற்றம் அப்பகுதி முழுவதும் வீசுவதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
0
0