தீபாவளி பலகாரத்தை பேப்பரில் வரைந்து பிரதமருக்கு அனுப்பிய பெண்கள் : விலை உயர்வை கண்டித்து போராட்டம்!!

5 November 2020, 12:37 pm
Diwali Sweets Protest - Updatenews360
Quick Share

கோவை : விலைவாசி உயர்வால் தீபாவளி பலகாரத்தை பேப்பரில் வரைந்து பிரதமருக்கு அனுப்பும் போராட்டத்தை கோவையில் இன்று மாதர் சங்கத்தினர் நடத்தினர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த காலத்தில் பெருவாரியான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அந்த மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து வருகிறது. இந்த சூழலில், தீபாவளிக்கு இனிப்புகள் உண்ணுவதே சிரமம் என்று தெரிவிக்கும் வகையில், கோவையில் மாதர் சங்கத்தினர் தீபாவளிக்கான பலகாரத்தை பேப்பரில் வரைந்து பிரதமருக்கு அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.

கோவை காட்டூர் பகுதியில் உள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மகளிர் கலந்து கொண்டு இனிப்புகளை பேப்பரில் வரைந்து விலைவாசி உயர்வுக்கு எதிரான தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Views: - 26

0

0