பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை ..!

14 September 2020, 9:59 am
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்கும். வழக்கமாக புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கொரோனா பேரிடர் காரணமாக, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதனால், கலைவாணர் அரங்கம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை வளாகத்தில் 150 அவைக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல வளாகத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் கிருமிநாசினிகள் கொண்டு தொடர்ச்சியாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அரங்கில் தனி நபர் இடைவெளியுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்காக மூன்றாவது தளத்தில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது தளத்தில் முதலமைச்சர் மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கான அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2-ம் தளத்தில் துணை சபாநாயகர், துணை முதலமைச்சர் அறைகளும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறைகள் ஓதுக்கப்படுள்ளது.

முதல் தளத்தில் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் எதிர்க்கட்சித் தலைவர்,காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளன.

மட்டும் இன்றி, எம்.எல்.ஏ.க்களுடன் அதிகாரிகள், பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கும் ஏற்கனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளுது. அனைவரும் தவறாமல் தங்களின் மருத்துவ சான்றிதழை சட்டப்பேரவை வரும்போது கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்நாள் இறந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 6

0

0