கல்லிலே கலை வண்ணம் கண்ட ஆசிரியர் : முட்டையை மின்சார விளக்காக மாற்றி அசத்தல்!!

14 October 2020, 7:44 pm
Teacher Record - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : நத்தம் அருகே கல்லிலே கலைவண்ணம் கண்ட வரிசையில் பாட்டில், முட்டை ஓட்டினுள் ஒளிரும் ஓவியம், குப்பை கழிவுகளில் சிற்பம் ஓவியம் தீட்டிய அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிகிறது.

கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் மன்னர்கள் வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிற்பம்,ஓவியம், இசை, நாட்டியம், போன்ற பல்வேறு கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கி வருகின்றனர்.அதன் வரிசையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் சிவக்குமார் என்பவர் குப்பை கழிவுகளையும்,பாட்டிலையும்,கலைப் பொருட்களாக மாற்றி கிராம மக்களின் பாராட்டை பெற்று வருகின்றார்.

சிறுகுடி அரசு மேல்நிலை பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றும் இவர் தனது வறுமைக்கோட்டை மறைக்க ஓவியக் கலை மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பள்ளியில் ஓவிய ஆசிரியர் பயிற்சி முடித்து தனது வாழ்க்கையை தொடங்கினார்.

தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கலைத் திறனுக்கு சான்றாக சிறிய பாட்டிலுக்குள் ஓவியம், முட்டை ஓட்டினுள் ஓவியம்,முட்களில் ஓவியம் போன்றவை பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது.

முட்டை ஓட்டின் உட்பகுதியில் ஓவியங்களைத் தீட்டி அதனுள் சிறிய அளவில் மின்சார விளக்கில் பொருத்தி பளிச்சிட செய்துள்ளார். இதனை மற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களாக தரும் வகையில் அழகு படுத்தி உள்ளார்.தேங்காய் மட்டை நார்களில் பல்வேறு விலங்குகளின் உருவங்களை உருவாக்கி அலங்கார பொருளாக மாற்றியுள்ளார். தனது பள்ளி மாணவ மாணவிகளுக்கு இது குறித்த பயிற்சியும் அளித்து வருகிறார்.

Views: - 62

0

0