சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சோகம் : கடலில் குளித்த போது அலையில் சிக்கி பலி

Author: kavin kumar
1 February 2022, 2:46 pm
Quick Share

திருவள்ளூர் : பழவேற்காட்டிற்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதி அழகிய சுற்றுலா பகுதியாகும். இங்கு விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய இடமான முகத்துவாரம் மற்றும் அதை சுற்றியுள்ள குட்டி தீவுகளைக் காண படகு மூலம் சவாரி மேற்கொண்டு சுற்றி பார்த்து வருவர். சில நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் மிகுதியால் முகத்துவாரம் பகுதியில் குளிக்கும் போது விபத்துக்கள் ஏற்பட்டு மரணங்கள் ஏற்படுவது வாடிக்கையானதால் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனாலும் தடையை மீறி படகு சவாரிகள் தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.அவ்வாறு கடந்த இரு தினங்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையன்பட்டு பகுதியில் வசிப்பவர் பொன்னுசாமி. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சோழவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.சக ஊழியர்களுடன் பழவேற்காட்டிற்கு சுற்றுலா வந்து தடை செய்யப்பட்டுள்ள படகு சவாரி செய்து முகத்துவாரம் பகுதிக்கு சென்று அங்கு கடலில் குறித்துள்ளார்.

இந்த நிலையில் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட விக்கி மாயமானார்.இரு தினங்களாக தேடிய நிலையில் இன்று அவரது உடல் கரை ஒதுங்கியது.இது குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தடையை மீறி படகு சவாரிகள் தொடர்ந்து நடைப்பெறுவதே இது போன்ற மரணங்களுக்கு காரணம் என பொது மக்கள் குற்றச்சாட்டிள்ளனர்.

Views: - 590

0

0