பள்ளி மாணவியிடம் கேலி கிண்டல் செய்த லாரி டிரைவர் போக்சோவில் கைது
Author: kavin kumar1 October 2021, 5:29 pm
திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி அருகே பள்ளி மாணவியை கேலி கிண்டல் செய்த லாரி டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். மாணவி பள்ளிக்கு செல்லும்போது வத்தலக்குண்டு தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சரவணபாலாஜி மாணவியை பின்தொடர்ந்து கேலி கிண்டல் பேசி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளி மாணவியை தொந்தரவு செய்த லாரி டிரைவர் சரவணபாலாஜியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
0
0