கொரோனா தொற்றை முற்றிலும் தடுத்த ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு கூல் ஊற்றிய கிராம மக்கள்

11 June 2021, 4:32 pm
Quick Share

தருமபுரி: அரூர் அருகே கொரோனா தொற்றை முற்றிலும் தடுத்த ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு கிராம மக்கள் கூல் ஊற்றினர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக ஒரு சில தளர்வுகளோடு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியும் வருகிறது. அதனடிப்படையில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் 500 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக இப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர். உலகமே கொரோனா பிடியில் மாட்டிக்கொண்டு தவித்து வரும் நிலையில் நெருப்பான்டகுப்பம் கிராமத்தில் மட்டும் இதுவரை எந்த ஒரு ஆபத்தும் வந்ததில்லை.

கொரோனா தொற்று காட்டுத்தீ போல் பரவிய நிலையிலும் கூட எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தியது போல் இந்த கொரோனா தொற்றையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அக்கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு 101 குடம் தண்ணீர் ஊற்றி அபிசேகம் செய்து வேண்டிக்கொண்டனர். இதனால் இக்கிராமத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று வந்ததில்லை என கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஒட்டுமொத்த கிராம மக்களும் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு இன்று கூல் ஊற்றி வேண்டுதலை நிறைவு செய்தனர்.

Views: - 67

0

0