பவானி சாகர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்வு….!!!

Author: Aarthi
11 October 2020, 9:30 am
bhavani-sagar-dam - updatenews360
Quick Share

ஈரோடு: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று மாலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 100.36 அடியாக இருந்தது. பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வழக்கம்போல் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 100.32 அடியாக உள்ளது. நீர் இருப்பு – 28.9 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு நீர்வரத்து – 2,326 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

Views: - 51

0

0