தொடர் கனமழை எதிரொலி: வேகமாக நிரம்பும் நெல்லை மாவட்ட அணைகள்…!!

Author: Aarthi Sivakumar
17 October 2021, 5:29 pm
Quick Share

திருநெல்வேலி: கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, அணையின் நீர் இருப்பு : 131.30 அடி, நீர் வரத்து : 20,862 கனஅடி, அணையின் வெளியேற்றம் : 1915.62 கன அடி

சேர்வலாறு அணையின் உச்சநீர்மட்டம் : 156 அடி, அணையின் நீர் இருப்பு : 147.90 அடி, நீர்வரத்து : 2,512 கன அடி, வெளியேற்றம் : 2659 கன அடி

மணிமுத்தாறு அணையின் உச்சநீர்மட்டம்: 118 அடி, அணையின் நீர் இருப்பு : 74.50 அடி, நீர் வரத்து : 5059 கனஅடி, வெளியேற்றம் : NIL

வடக்கு பச்சையாறு அணையின் உச்சநீர்மட்டம்: 50 அடி, நீர் இருப்பு: 16.65 அடி, நீர் வரத்து: NIL, வெளியேற்றம்: Nil

நம்பியாறு அணையின் உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 10.36 அடி, அணையின் நீர்வரத்து: NIL, வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு அணையின் உச்சநீர்மட்டம்: 52.25 அடி, நீர் இருப்பு: 50 அடி, அணையின் நீர்வரத்து: 639 கன அடி, வெளியேற்றம்: 639;கன அடி.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்:

கடனா அணையின் உச்சநீர்மட்டம் : 85 அடி, நீர் இருப்பு : 79.80 அடி, நீர் வரத்து : 1630 கன அடி, வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி அணையின் உச்ச நீர்மட்டம் : 84 அடி, நீர் இருப்பு : 69.50 அடி, நீர்வரத்து : 415 கன அடி, வெளியேற்றம் : 30 கனஅடி

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு! - தினசரி

கருப்பா நதி அணையின் உச்சநீர்மட்டம்: 72 அடி, நீர் இருப்பு : 61.03 அடி, நீர் வரத்து : 250 கன அடி, வெளியேற்றம் : 25 கன அடி

Views: - 503

0

0