உடல் முழுதும் கத்தி.. அந்தரத்தில் தொங்கியபடி வந்த பக்தர்கள்.. பழனி கோவிலில் காண்போரை மெய்சிலிர்க்க வைத்த காட்சி!
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தைப்பூச திருவிழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மலையடிவாரத்தில் மயில் காவடி, மலர் காவடி, பால் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பெரிய கிரேன் வாகனத்தில் உடல் முழுவதும் கத்திகளை குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் மலையடிவாரத்தில் கிரிவலம் வந்தனர்.
அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் வருவதை ஏராளமானோர் கூடி நின்று மெய்சிலிர்க்க பார்த்தனர். தைப்பூசத் திருவிழா முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசாமி- வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி 24 ஆம் தேதி மாலையும், தைப்பூச தேரோட்டம் நிகழ்ச்சி 25 ஆம் தேதி மாலையும், நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் நிர்வாகமும், திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை காவல்துறையினரும் செய்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.