கண்டித்தும் கள்ளக்காதலை கைவிடாத மனைவி : அரிவாளால் வெட்டிக் கொன்று சரணடைந்த கணவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2022, 1:56 pm
Wife Murder Hubby Surrender -Updatenews360
Quick Share

திருப்பூர் : கள்ளக்காதலை கண்டித்தும் கைவிடாத மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணமடைந்தார்.

திருப்பூர் காலேஜ் ரோடு சலவைபட்டறை, ஜே.ஜே நகரை சேர்ந்தவர் குமார் (வயது 31). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 25). கடந்த, ஐந்து மாதமாக திருப்பூரில் வசித்து வருகின்றனர்.

சொந்த ஊரான தென்காசியில் தம்பதியர் இருந்த போது, தனலட்சுமிக்கு, காட்டுராஜா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்த கணவர், மனைவியை கண்டித்தார். ஆனால், திருப்பூர் வந்த பிறகும், அந்த நபருடன் மொபைல் போனில் பேசி வந்தார்.

இச்சூழலில், இன்று அதிகாலை, 2:30 மணியளவில் தம்பதியர் இடையே, கள்ளக்காதல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குமார் அரிவாளால், மனைவியை தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
தொடர்ந்து, வேலம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் குமார் சரணடைந்தார். அவரை வேலம்பாளையம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Views: - 487

0

0