புரோட்டா மாஸ்டராக மாறிய பெண் : வீச்சு முதல் கொத்து புரோட்டா வரை..!! (வீடியோ)

By: Udayachandran
7 January 2021, 2:42 pm
Lady Parotta Master -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வேடசந்துர் அருகே புதுரோட்டில் புரோட்டா மாஸ்டராக மாறிய பெண் பட்டையை கிளப்பும் வீடியோ வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் நாகையகோட்டை ஊராட்சி புது ரோட்டில் கடந்த பத்து வருடமாக ஹோட்டல் கடை வைத்து நடத்தி வருபவர் மாசிலாமணி என்ற 29 வயதான பெண்.

இவருடைய கணவர் மில் தொழிலாளியாக உள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது தந்தை மாரிமுத்து உதவியுடன் கடந்த பத்து வருடங்களாக ஹோட்டல் கடை வைத்து நடத்தி வரும் இவர் புரோட்டா வீசுவதில் கில்லாடி.

புரோட்டா போடுவது, சாப்பாடு சமைப்பது, குருமா வைப்பது அனைத்திலும் திறமையாக தனது ஹோட்டல் கடையை நடத்தி வரும் இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

தந்தயின் உதவியால் முதலில் புரோட்டா போட கத்துக்கொண்டவர், தற்போது அதில் கில்லாடியாக செயல்பட்டு வருகிறார். பொதுவாக ஒரு உணவகத்தில் புரோட்டா மற்றும் தோசை தனியாக மாஸ்டர் ஒருவரை நியமித்து வேலை செய்வர்.

ஆனால் இந்த பெண், வீச்சு புரேட்டா முதல் கொத்து புரோட்டா வரை தனித் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மாஸ் காட்டும் இந்த மாசிலாமணியின் வீடியோவை பார்த்த பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Views: - 61

0

0