கடந்த சில நாட்களுக்கு முன் கோவை புலியகுளம் பகுதியில் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான அப்துல் ரஹ்மான் மற்றும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா ஆகியோர் பாம்பை பிடித்தனர்.
இதனை கோவை வனச்சரக அலுவலர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.சாரை பாம்பை பிடித்தபோது சாரை பாம்புகள் விஷமற்றவை அவற்றால் மனிதர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்ற விழிப்புணர்வு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அது வைரலானது.
இந்த நிலையில் பாம்பை மீட்ட அப்துல் ரஹ்மான் மற்றும் உமா மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதியின்றி இன்றி பிடித்து செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தினர்.
விசாரணைக்கு பின்னர் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடித்த தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினரான இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கபட்டனர்.
மேலும் படிக்க: உங்க கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க முடியாது : கெஜ்ரிவாலுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்!
இதுகுறித்து கோவை மாவட்ட வனப்பாதுகாவலரிடம் கேட்டபோது இதுபோன்று மற்றவர்கள் ஈடுபட கூடாது எனவும் நல்லெண்ண அடிப்படையில் இருவரும் செயல்பட்டதால் ஜாமீனில் விடுவிக்கபட்டனர் எனவும் தெரிவித்தார்.
வீடியோ சமூக ஊடங்களில் வைரல் ஆனது தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகவும் அப்போது தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.