வார்த்தையா? வாக்கா? : ரஜினியை அரசியலுக்கு அழைத்து ரசிகர்கள் போஸ்டர்!!

1 November 2020, 2:19 pm
Rajini Poster - Updatenews360
Quick Share

மதுரை : வார்த்தையா வாக்கா முடிவு செய்யுங்கள் முடிவு சொல்லுங்கள் தலைவா என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டவைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல இருப்பினும் அதில் வந்திருக்கும் என்னுடைய உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் கூறிய அறிவுரைகள் தகவல்கள் அனைத்தும் உண்மை இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன் என்று கூறினார்.

இந்த நிலையில் காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் வார்த்தையா வாக்கா முடிவு செய்யுங்கள், முடிவு சொல்லுங்கள், தலைவா.. மாற்றத்தை எதிர்பார்க்கும் தமிழக மக்கள் என்ற வாசகங்களுடன் மதுரை மாநகர் முழுவதும் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 17

0

0