200 அடி கிணற்றில் குதித்த தொழிலாளி… சடலம் கிடைக்காமல் 3 நாட்களாக திணறும் தீயணைப்புத்துறை!

Author: Udayachandran RadhaKrishnan
13 செப்டம்பர் 2024, 1:36 மணி
Suicide
Quick Share

கோவை சங்கனூர் பகுதியில் வசித்து வந்தவர் விஜய் என்ற விஜயராகவன்.இவர் அந்தப் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை விஜயராகவன் பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது.

மேலும் அவர் குடும்ப பிரச்சனையின் காரணமாகவும் மனமுடைந்து காணப்பட்டார்.இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்த போது சற்று நேரத்தில் வருகிறேன் எனக் கூறிவிட்டு பக்கத்தில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான 200 அடி ஆழம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் படிக்க: அன்னபூர்ணா விவகாரம்.. பாஜகவினர் மீது அண்ணாமலை கோபம் : லண்டனில் இருந்து பரபர அறிக்கை!

இது குறித்து உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விஜயராகவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.3வது நாளாக தீவிரமாக தேடி வரும் தீயணைப்பு துறையினர் உடலை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

  • Nithyananda Ranjitha நித்யானந்தா உடன் தான் இருக்கிறேன்.. ரஞ்சிதா வெளியிட்ட பகீர் தகவல்!
  • Views: - 144

    0

    0