அதிவேகமாக வந்த பல்சர் பைக் நிலைதடுமாறி விபத்து : 10 அடி தூரம் வாலிபர் இழுத்து சென்ற காட்சி!!

16 June 2021, 7:02 pm
Bike Accident - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : அழகியமண்டபம் அருகே அதிவேகத்தில் வந்த பைக் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்த நிலையில் விபத்து குறித்த பதைபதைக்கும் சி.சி.டிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குன்னம்பாறை பகுதியை சேர்ந்த 30-வயதான வாலிபர் விஜின் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் தனது பல்சர் பைக்கில் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார்.

அப்போது அழகியமண்டபம், மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். புலிப்பனம் ஜங்சன் பகுதியில் வரும் போது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பைக் சாலையில் கவிழ்ந்தது.

இதில் விஜின் தலைகுப்புற சாலையில் விழுந்த நிலையில் மோட்டார் சைக்கிளால் சுமார் பத்தடி தூரத்திற்கு தரதரவென இழுத்து செல்லப்பட்ட நிலையில் மற்றொரு பைக்கில் மோதி நின்றது.

இதனையடுத்து படுகாயமடைந்த விஜின் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 294

2

0