குருவி இனத்தை காக்க இருசக்கர வாகனத்தை கொடுத்த இளைஞர்!!
20 August 2020, 4:16 pmதிருப்பூர் : இருசக்கர வாகனத்தில் குருவி கூடு கட்டுவதை பார்த்த இளைஞர் இருசக்கர வாகனத்தை எடுக்காமல் அந்த இனங்களை காத்து வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மகேஷ்குமார். இவர் வெள்ளகோவில் பகுதியில் இளைஞர்களுடன் ஒன்றிணைந்து நிழல்கள் என்ற அமைப்பை துவங்கி மரம் நடுதல், குளம் தூர்வாருதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றார்.
இந்நிலையில் இவர் பணிமுடித்து வீடு சென்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினால் அதில் சிறிய வகையான கருஞ்சிட்டு குருவி வகையை சார்ந்த இரு குருவிகள் அதில் வந்து அமருவதை கண்டுள்ளார்.பின்னர் ஓரிரு நாளில் தனது பைக்கின் முன்பகுதியான மீட்டர் அருகே குருவி தங்குவதற்கு கூடு கட்ட தேவையான குச்சிகளை சேமிக்க துவங்கியதாகவும் இதனால் தனது இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் அதே இடத்தில் நிறுத்திவிட்டதாகவும் மகேஷ்குமார் தெரிவித்தார் .
பின்னர் அந்த கூண்டில் இருமுட்டைகள் வைத்து பின்னர் 20 நாட்களுக்கு மேலாக அடை காத்து பின்னர் குஞ்சு பொரித்ததாகவும் தற்போது பெண் குருவி, குஞ்சு குருவியை பாதுகாத்துவருவதாகவும் ஆண் குருவி இவைகளுக்கு இரைதேடி கொண்டுவருவதாகவும் தெரிவிக்கின்றார்.
இதனால் கடந்த சிலமாதங்களாக இருசக்கரவகத்தை இயக்குவது இல்லை என்கின்றார்.மேலும் இவருடைய வீட்டின் அருகில் சிட்டுக்குருவி, மணிப்புறா, கருஞ்சிட்டு, தேன் சிட்டு, தூக்கணாங்குருவி உட்பட ஏராளமான குருவிகள் கூடுகட்டி வாழ்கின்றது. மேலும் வீட்டை சுற்றியிலும் குருவிகள் ஏராளமாக கூடுகட்டி உள்ளது.
இந்தியா முழுவதிலும் 1314 பறவை இனங்களில் தற்போது 34 பறவை இனங்கள் மட்டுமே உள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவருகின்றது. மேலும் கிராம புறங்கள் அதீத வளர்ச்சியால் நகரங்களாக மாறுவதாலும் ஓட்டுவீட்டிற்கு மாற்றாக ஆர்சி வீடுகள் மாறி வருகின்றனர்.
நவீன விவசாயத்தினால் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துதல் , செல் போன் டவர் அதிகரிப்பில் கதிர்விச்சு பாதிப்பு ஆகிய காரணங்களால் குருவிகள் இனங்கள் அழிவை நோக்கி செல்கின்றன . உலகம் என்பது மனிதர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு மட்டும் இல்லை இங்கு பறவைகள், விலங்குகள் , பூச்சிகள் போன்ற உயிர் சங்கலிகளால் பிணைக்கப்பட்டது.
இன்றைய இளைஞர்கள் வீடுகளில் குருவிகளுக்கு என்று அட்டை பேட்டி, பிவிசி பைப் அல்லது சிரியவகை பானைகளில் குருவி கூடுகள் விற்பனை செய்யப்படுவதை ஆர்வத்துடன் வாங்கி தங்களது வீட்டில் வைக்கின்றனர். அதே போல் அதிகப்படியான மக்கள் அழிந்துவரும் குருவி இனங்களை காக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் .