திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது…

Author: kavin kumar
18 August 2021, 8:31 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியை சேர்ந்த 15 வயது சிறுமி அருகில் உள்ள கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமியை கோரைக்குளத்தை சேர்ந்த 23 வயதான ஆறுமுகம் என்ற இளைஞர் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டறுகே உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்று பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடிரென வயிற்றுவலி ஏற்பட்டது.

சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது சிறுமி கர்பமாய் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது ஆறுமுகம் அத்துமீறலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகத்தை மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 230

0

0