திரையரங்குகள் திறப்பது குறித்து விரைவில் முதலமைச்சர் ஆலோசனை : அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்..

Author: Udayachandran
12 October 2020, 12:38 pm
Minister Kadamboor Raju- Updatenews360
Quick Share

தூத்துக்குடி : திரையரங்குகள் திறப்பது பற்றி அடுத்த வார தொடக்கத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சுகாதார குழுவிடம் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் திரையரங்கு திறப்பது பற்றி மத்தியரசு சமீபத்தில் தான் வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளது. 50 சதவீதம் மக்களை அனுமதிக்க வேண்டும், ஆன்லைனில் டிக்கெட் விற்பனை என பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

எனவே மத்தியரசு வழங்கியுள்ள நடைமுறைகளை நடைமுறைப்படுத்தி திரையரங்குகளை திறப்பது பற்றி அடுத்த வாரம் தொடக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திரையரங்கு உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள் அழைத்து பேச உள்ளதாகவும், மேலும் சுகாதார குழுவிடமும் இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும். இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் அன்றே திரையரங்குகள் திறக்கும் தேதி குறித்து முடிவு செய்யப்படலாம் என்றார்.

Views: - 47

0

0