ஒரே ‘வில்லா‘வில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு.. அரைகுறை ஆடையுடன் ஆட்டையை போட்ட கொள்ளையர்கள் : சிசிடிவி காட்சி..!

Author: Udayachandran
31 July 2021, 1:10 pm
Cbe Theft- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை மதுக்கரை மார்க்கெட், ஸ்ரீ ராம் விலாஸ், பகுதியில் தொடர்ச்சியான வீடுகள் உள்ளன. அங்கு ரவிக்குமார் லாட்ஜ் உரிமையாளர், ரவிச்சந்திரன் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி மேலாளர், வெங்கட் ஓய்வு பெற்ற சாப்ட்வேர் இன்ஜினியர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் உட்பட 7 பேர் வீடுகளில் அனைவரும் வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டினுடைய பின்பக்க கதவை உடைத்து வீட்டின் கீழ் தளத்திற்கு சென்று பீரோவில் உள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கைரேகை நிபுணர்கள் வந்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன.

மொத்தம் எவ்வளவு திருடப்பட்டு உள்ளது என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கோவை மாவட்டத்தில் போதை மற்றும் கொலை, கொள்ளை வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில், அடுத்தடுத்து உள்ள 7 வீடுகள் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Views: - 151

0

0