திருட்டு வாகனம் வழக்கில் திடீர் திருப்பம்.!! காரமடையில் 3- பேர் சிறுமுகையில் 4 -பேர் கைது.!!

29 August 2020, 11:03 am
Quick Share

மேட்டுப்பாளையம்: காரமடை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ஆறுமுகம். இவர் வைத்திருந்த கருப்பு நிற இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என பெரியநாயக்கன்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இவரின் உத்தரவின்பேரில் காரமடை காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் தலைமையிலான போலீஸார்காரமடை அருகே கெண்டையூர் ரோட்டில் கருப்பு நிற பல்சர் பைக்கில் வந்த ஆறுமுகத்தையும் அவருடன் அதே பைக்கில் வந்த, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சங்கரின் மகன் சரவணன் என்னும் சரவணக்குமார் ஆகியோரை குருந்தமலை இருந்து மங்கலக்கரை செல்லும் சாலையில் ஆகிய இருவரையும் கைது செய்தும்.

மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதூர் ஊராட்சிக்குட்பட்ட கெம்பனூரில், கடந்த ஜூன் 25 ஆம் தேதி இரவு 20.15 மணிக்கு சந்திரசேகரன் என்பவரின் வீட்டினுள் அருவாள் மற்றும் இரும்பு ராடுடன் புகுந்து, தனியாக இருந்த அவரது மனைவி அனிதாவின் தலையில் இரும்பு ராடால் தாக்கி அவர் அணிந்திருந்த 9¼ பவுன் தங்க நகைகளை அருவாளை காட்டி கொள்ளையடித்து, அதனை கோயம்புத்தூரில் கொண்டுசென்று விற்றதாக கூறினர்.

மேட்டுப்பாளையம் மனோகரன் எங்க வருது மகன் சரவணன் ஏன்னும் சரவணக்குமார் (40), காரமடை வெங்கடாசலம் ஆறுமுகம் (54),காரமடை வடமங்கலக்கரை கருப்புசாமி என்பவரின் மகன் ரவி என்னும் ரவீந்திரன் (25), காரமடை குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மேட்டுப்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்த பிரேம் ஏன்னும் பிரேம்குமார் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ன சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்களிடம் இருந்து 9¼ பவுன் தங்க கட்டி அவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்கள் அருவாள் மற்றும் இரும்பு ராடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதேபோல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிறுமுகை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட சிட்டேபாளையத்தில் முஸ்தபா என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையின் பூட்டை உடைத்து பர்னிச்சர்களை மேற்கண்ட நான்கு பேரில் நாகராஜை தவிர குளத்துபாளையத்தை சேர்ந்த ஆனந்தராஜ், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் சின்ன சரவணன், பிரேம்குமார், டேங்க் மேட்டுப் பகுதியை சேர்ந்த மூர்த்தி ஆகியோர் சேர்ந்து கடையில் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் இந்தப் பொருட்களை மேட்டுப்பாளையத்தில் சரவணகுமாருக்கு தெரிந்த ஒருவரின் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த பொருட்களை சிறுமுகை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரேம்குமார், ஆனந்தராஜ், சின்ன சரவணன், மூர்த்தி ஆகியோரை சிறுமுகை போலீசாரிடம் கைது செய்தனர்.

இந்த இரு குற்ற வழக்குகளும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரவண குமார் என்பவர் மூளையாக செயல்பட்டு வந்ததாகவும் இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி என விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவரது தலைமையில் காரமடை சிறுமுகை ஆகிய பகுதிகளில் இவரது கூட்டாளிகள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து காரமடையில் 3 பேரையும் சிறுமுகையில் 4 பேர் என 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நாகராஜ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர் பவானி ஆற்றில் இருந்து தொண்டாமுத்தூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் செயல்பட்டு வரும் நீரேற்று நிலையத்தில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 39

0

0

1 thought on “திருட்டு வாகனம் வழக்கில் திடீர் திருப்பம்.!! காரமடையில் 3- பேர் சிறுமுகையில் 4 -பேர் கைது.!!

Comments are closed.